வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
⭕கட்டண அதிகரிப்பு
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் 51 வது பிரிவின் கீழ் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு உரிமம் புதுப்பித்தலுக்கும் 50,000 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் தற்போது 100,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.