🔵ஸ்மார்ட் மின்சார மீட்டர் வருகிறது

 

இலங்கையில்   ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.


 இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா மின்சார நிறுவனம் ஆகியவற்றிற்கு தேவையான ஒற்றை கட்ட மீட்டர்கள் இலங்கையில் ANTE LECO Metering Company  மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.


LECOஇன் துணை நிறுவனமான  LECO Metering Company (Pvt) Ltd. வருடாந்தம் 250,000 மீட்டர்களை உற்பத்தி செய்கிறது.


மேலும், நிறுவனம் இந்த ஆண்டு 3-பேஸ் மற்றும் ஸ்மார்ட் மின்சார மீட்டர் உற்பத்தியை விரிவுபடுத்தும் என தெரிவித்துள்ளார்.


'விரிவாக்கத்துடன், நிறுவனம் ஒற்றை-கட்டம், 3-கட்டம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களுக்கான முழு உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது.


மேலும், எதிர்காலத்தில் ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்டு செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.