பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியை மரணம்


ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையின் கண்காணிப்பாளராகக் கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் வத்தேகம மகளிர் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவர் பரீட்சை ஆரம்பிப்பதற்குச் சற்று முன்னர் திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார். உடனே அவர் வத்தேகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையே (வயது 48) உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆசிரியை உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.