ளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி இன்று (19.06.2023) முதல் ஆரம்பிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
*⭕கைரேகைகள்*
வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பணம் செலுத்துவதற்கு முன்னர் விண்ணப்பப் படிவம் சரிபார்க்கப்படும்.
பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேர் கைரேகைகளை பெற்றுக்கொள்வதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.