கொழும்பில் வீடொன்று தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 26 பேர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ள குறித்த வீடு இருவருக்கும் சொந்தமில்லாததால், அதனை சொந்தமாக்கிக் கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 7ஆம் திகதி பிற்பகல் குறித்த வீட்டு எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக குருந்துவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
⭕26 பேர் கைது
அதன் பிரகாரம் பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது
இதன் பின்னர், நிலைமையைக் கட்டுப்படுத்திய பொலிஸார், இருதரப்பையும் சேர்ந்த 26 பேரை கைது செய்ததோடு அவர்களில், சிலர் அருகில் உள்ள வீடுகளுக்கு தப்பிச் சென்ற நிலையில் அவர்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.