🔴ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 365 நாட்களே!


ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 365 நாட்களே உள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்தார்.


தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் நான்கு மடங்கு அவலத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், முப்பது வருடகால யுத்தத்தின் போதும் சுகாதார சேவை இவ்வாறானதொரு வீழ்ச்சியை சந்திக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசு மருத்துவமனைகளின் நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது, நம்பகத்தன்மையில் பிரச்சினை, மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாட்டால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என, கணக்காய்வாளர் அறிக்கைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.