🔴கொலை வழக்கில் 37 பேருக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் 37 பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


கம்பஹா நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரல கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.