தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான் சர்வகட்சி கூட்டம் இன்று!

 தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டம் இன்று (26) நடைபெறவுள்ளது. 


மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.


இந்த சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


தேசிய மக்கள் சக்தி இன்றைய சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.