🔴ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்! ஜே.வி.பி. சூளுரை


ஆட்சியை நாம் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீரவில்லை. அதிகாரம் உள்ள வர்க்கம் அதிகாரம் அற்ற வர்க்கத்தை நிர்வகித்துக் கொண்டு செல்கின்றது. அவர்களைக் கஷ்டத்தில் தள்ளியுள்ளது.


மக்களின் பிரச்சினை தீர இதுவே வழி

அந்த மக்கள் வாழ்வதற்காகப் போராடுகின்றார்கள். அவர்களை நாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். அந்த மக்களின் பிரச்சினை தீர வேண்டுமென்றால் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.


அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பல வழிகளில் நாம் போராடுகின்றோம். ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்.


மின் வெட்டு இல்லாததால், எரிபொருளுக்கான வரிசை இல்லாததால் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது என்று சிலர் நினைக்கின்றார்கள்.


ஆனால், உண்மையில் பிரச்சினை தீரவில்லை. பிரச்சினை தீர்ந்தால் மக்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமே என குறிப்பிட்டுள்ளார்.