🔴முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நீக்கம்


முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை இன்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.


வௌ்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும் நிர்ணய விலையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.