🔴முட்டை விலை குறைப்பு

வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


முட்டைக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை காரணமாக முட்டை விலை குறைவடையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.


முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நேற்று(25) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்திருந்தது.


முட்டைக்கு நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் விநியோகஸ்தர்கள் மாத்திரமன்றி முட்டை உற்பத்தியாளர்களும் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததாக அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.