🔴லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைப்


இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.3,690 ஆக உள்ளது.



இதேவேளை, 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1476 ரூபாவாகும்.