🔴ஐந்து நாட்களும் தொடர் வீழ்ச்சி அடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தகவல்



நேற்றுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(21.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


⭕இன்றைய நாணய மாற்று விகிதம்


🔹இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (21.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  *331.98*  ரூபாவாகவும், கொள்வனவு விலை   *318.72* ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


🔹மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை  *253.83* ரூபாவாகவும், கொள்வனவு விலை  *240.86* ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


🔹பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி *371.55*  ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி *353.96* ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


🔹அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  *428.97* ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  *409.73* ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.