கோல்பேஸ் வந்த சிறுமியை கடத்த முயன்றவர் கைது!

 
காலி முகத்திடலிற்கு  தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர்  ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.