🔴பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை


மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட சமுர்த்தி வங்கி வீதி, தாழங்குடா – 03ஐச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த நபர் கடந்த 01ஆம் திகதியிலிருந்து காணமல்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


நாகேஸ் டினோ எனும் 30 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளார்


⭕பொலிஸ் 8நிலையத்தில் முறைப்பாடு


இது குறித்து காத்தான்குடி - பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (03.07.2023) முறைப்பாடு செய்துள்ளதாகவும், அக்கரைப்பற்றிலுள்ள பேருந்து தரிப்பிடமொன்றில் குறித்த நபரை முச்சக்கரவண்டி சாரதியொருவர் அவதானித்தாகவும் தெரியவந்துள்ளது.


மேலும், இது தொடர்பில் தனது மனநலம் பாதிக்கப்பட் தம்பியை யாராவது அவதானித்தால் தனது 0750438780 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.