நுவரெலியா – இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பணி
ப்புரைக்கமைய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு, தோட்ட நிர்வாகத்துடனும் தொடர்புகொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் மேலதிக தேவைப்பாடுகளை அறிவதற்காகவும், மாற்று தங்குமிட ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் இன்று தோட்டத்துக்கு சென்றிருந்தார்.