இலங்கை தாதியர்கள் இஸ்ரேல் பயணம்!

 
இஸ்ரேலில் வீடுகளை அடிப்படையாகக் கொண்ட தாதியர் சேவைக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 441 இலங்கையர்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த சேவையில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள 21 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இஸ்ரேலுக்கு பயணமாகினர்.


அதேநேரம் 16 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் அடுத்த மாதம் 2 ஆம் திகதி இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.