22 வயது மருத்துவபீட மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை மாணவன்
மருத்துவ பீட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது பாடசாலை மாணவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், ஜாஎல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய மருத்துவ மாணவியே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.