அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளரும், முன்னாள் கல்முனை மாநகர உறுப்பினருமான ஜனாப் எம்.ஐ.எம் அப்துல் மனாப் அவர்களின் ஏற்பாட்டில் திடீர் விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கௌரவ தலைவரும், முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களுடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனை கிளை உறுப்பினர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு, கல்முனை கிளை காரியாலயத்தில் நேற்று நண்பகல் (20) இடம்பெற்றது.
இச் சந்திப்பில் எமது காரியாலயம் இங்கு அமையப்பெற்ற நோக்கத்தையும், எமது ஜம்இய்யத்துல் உலமாவின் நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஜம்இய்யாவின் எதிர்கால செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.