நாட்டை அபிவிருத்தி செய்த ராஜபக்ஷக்களை திருடர்களாக காட்ட முயற்சி - சாகர கவலை!

 




நாட்டை அபிவிருத்தி செய்த தலைவர்களை, சில தரப்புக்கள் திருடர்களாக காண்பிக்க முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாட்டை அழித்த தரப்புக்கள் எவ்வித அடிப்படையுமின்றி தமது கட்சியின் தலைவர்களை திருடர்கள் என சித்தரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சு பதவிகளை வகித்த காலத்தில் எதனையும் நாட்டுக்காக செய்யாதவர்கள் இன்று தமது கட்சித் தலைவர்களை குற்றம்சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணித் தலைவர்களை திருடர்கள் என விமர்சனம் செய்யும் நபர்களே இந்த நாட்டை அழித்தவர்கள் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.