பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தனது அரசை கவிழ்த்ததில் அமெரிக்காவின் சதி இருந்ததாக கடந்த ஆண்டு இம்ரான் கான் குற்றச்சாட்டினார். இதை அமெரிக்காவும், பாகிஸ்தான் இராணுவமும் மறுத்தன.
இதற்கிடையே கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் அனுப்பிய இரகசிய தகவலை இம்ரான் கான் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக இம்ரான்கானுக்கு எதிராக குற்றவியல் விசாரணையை தொடங்கி உள்ளதாகவும், புதிய வழக்கில் அவர் மற்றும் மூன்று உதவியாளர்களின் பெயர்கள் பதிவு செய்துள்ளதாகவும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தியோகபூர்வ இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கான் மீது குற்றச்சாட்டியதற்காக நீதிமன்ற வழக்கு தொடர ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.