அறிவிப்பாளர் போட்டியில் முதலிடம்!

 
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவு நடாத்திய சிறுவர் கலை, கலாசார நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர் போட்டியில் பர்ஹி நமா முதலிடம் பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் இவர், ஊடகவியலாளர் எச்.எம்.எம்.பர்ஸான்,  எம்.எஸ்.நூரா தம்பதிகளின் புதல்வியாவார்.


பிரதேச மட்ட போட்டியில் வெற்றிபெற்று மாவட்ட மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவி பர்ஹி நமாவுக்கு பாடசாலை அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் எனப்பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.


எஸ்.எம்.எம்.முர்ஷித்