அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின்போது கீழே விழுந்து குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான உள்ளக விசாரணை அறிக்கை வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. ரம்பேவ – கல்லஞ்சிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 10 திகதி பிரசவித்த குழந்தையொன்றை கீழே வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குழந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தது.
மருத்துவர்களின் கவனக்குறைவால் குழந்தை தரையில் வீழ்ந்து உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அது தொடர்பான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.