இந்தியா, திருவண்ணாமலை அருகே நடைபெற்ற இந்தி தேர்வில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தி பிரச்சார சபா சார்பில் தமிழகத்தில் இந்தி தேர்வு நேற்று நடைபெற்றது. பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா ஆகிய முதல் 3 நிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவிகள் மற்றும் பெண்கள் தேர்வு எழுத வந்தனர்.
அவர்களிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என தேர்வு மைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, முஸ்லிம் மாணவிகள், பெண்கள் உள்ளிட்டவர்கள், ஹிஜாப்பை அகற்றிவிட்டு, தேர்வு எழுதினர். அதேநேரத்தில் மத்யமா தேர்வு எழுத வந்திருந்த பெண் ஷாபனா, ஹிஜாப்பை அகற்ற மறுத்ததால், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர், தேர்வு மையத்தில் இருந்து வெளியேறினார்.