🔴டொலரின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி! மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு


தொடர்ந்து நான்கு நாட்களாக உயர்ந்து வந்த அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றையதினம்(09.08.2023) திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


⭕இன்றைய நாணய மாற்று விகிதம்


🔹இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.52  ரூபாவாகவும், கொள்வனவு விலை 314.94  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


🔹மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.47 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.79 ரூபாவாகவும்  பதிவாகியுள்ளது.


🔹பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி


🔹இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


🔹அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 418.91  ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 399.98  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.