🔴இ.போ.ச பஸ்களால் ஏற்படும் செலவு எவ்வளவு தெரியுமா?


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 1,400 பஸ்கள் வருடாந்தம் விபத்திற்குள்ளாகுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 


குறித்த பஸ்களை பழுதுபார்த்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக வருடமொன்றுக்கு 465 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார். 


குறித்த பஸ்கள் விபத்திற்குள்ளானதன் பின்னர் அவற்றை மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு தேவைப்படும் காலப்பகுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.