ஊழல் வழக்கில் கைதான இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் 'சி' வகுப்பு அறையில் அவர் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் இருக்கும் இம்ரான்கானை சந்திக்க அவருடைய சட்டத்தரணி குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி அவரது முதன்மை சட்டத்தரணி நயீம் ஹைதர் பன்ஜோதா அவரை நேரில் சந்தித்துள்ளார்.
பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பன்ஜோதா கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,
அப்போது அவர் 'சிறையில் இம்ரான்கானுக்கு 'சி' வகுப்பு என்னும் சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னாள் பிரதமரை பயங்கரவாதிகளை நடத்துவது போல் நடத்துகிறார்கள்.
திறந்த கழிப்பிட வசதி கொண்ட அறையில் காற்று வசதி, வெளிச்சம் புகாத வண்ணம் அவரை அடைத்து கொடுமைப் படுத்துகிறார்கள்.
மேலும் பகலில் ஈக்களாலும், இரவில் நுளம்பினாலும் இம்ரான்கான் அவதிப்படுகிறார். என்னை இங்கிருந்து அழைத்து செல்லுங்கள்.
இங்கே (சிறையில்) ஒருநொடி கூட இருக்க விரும்பவில்லை என தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.