பெரியதாய் ஒன்றும் வேண்டாம்.

 




பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் வேண்டாம், பழி சொல்லாமல் இருந்தாலே போதும்.


பூமாலை இட்டு புகழ்ச்சிகள் வேண்டாம், புண்படுத்தாமல் இருந்தாலே போதும்.


புதுப்புது ஆச்சரியங்கள் வேண்டாம், பொய்ப்பிக்காமல் இருந்தாலே போதும்.


ஆசை வார்த்தைகள் வேண்டாம், அசிங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும்.


உயர்வான மதிப்புக்கள் வேண்டாம், உதாசீனப்படுத்தாமல் இருந்தாலே போதும்.


எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டாம், எதிர்க்காமல் இருந்தாலே போதும்.


எண்ணங்களில் அற்புதங்கள் வேண்டாம், ஏமாற்றாமல் இருந்தாலே போதும்.


எப்போதும் பரிசில்கள் வேண்டாம், ஏளனப்படுத்தாமல் இருந்தாலே போதும்.


நிரந்தரமான மகிழ்ச்சிகள் வேண்டாம், நிர்ப்பந்திக்காமல் இருந்தாலே போதும்.


காலமெல்லாம் தாங்க வேண்டாம்,  காயப்படுத்தாமல் இருந்தாலே போதும்.


கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம், கலங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும்.


கஷ்டங்களை சுமக்க வேண்டாம், கவலை தராமல் இருந்தாலே போதும்.


கனவுகளை கரை சேர்க்க வேண்டாம், கலைக்காமல் இருந்தாலே போதும்.


#பெரியதாக_ஒன்றும்_வேண்டாம்

#உண்மையாக_இருந்தாலே_போதும்.


✒️ புஷ்ரா அஷ்ரப்f