🔴மீன்களின் விலை வீழ்ச்சி !


சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்தார்.


இதற்கமைய லின்னோ மீன் ஒரு கிலோகிராம் 400 முதல் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.


ஒரு கிலோகிராம் கெலவல்லா 1100 ரூபாவுக்கும், பலயா 700 ரூபாவுக்கும், கணவாய்  700 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


கடந்த வாரம் கெலவல்ல மீன் 2200 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.