🔴நுவரெலியாவில் இளம் தம்பதியினர் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்


நேற்றிரவு நுவரெலியா டோப்பாஸில் தம்பதியொருவர் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


உயிரிழந்த ஆணுக்கு 28 வயது என்றும் பெண்ணுக்கு 26 வயது என்றும், அப்பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டமை தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.