🔴சுகாதார அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்பு: சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள மனு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராகக் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நிகழ்வு நாவலப்பிட்டியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  


இந்நிகழ்வு இன்று (13.08.2023) நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சமகி ஜன பலவேகவினால் (SJB) நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த கையெழுத்து சேகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது


⭕சபாநாயகரிடம் மனு


சுமார் 10 ஆயிரம் கையெழுத்துகளுடன் கூடிய இந்த மனு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.