சமூகப்பற்றுள்ள ஒருவரே சகோதரர் ஜின்னா காரியப்பர் அவர்கள்

 

கல்முனை மண்ணிலிருந்து உருவான மூத்த தலைவர்களில் முதன்மையான முன்னாள் அமைச்சர் கேட்முதலியார் மர்ஹூம் MS.காரியப்பரின் சிரேஸ்ட புதல்வர் பிரபலமான சமூக செயற்பாட்டாளர் அல்ஹாஜ் ஜின்னா காரியப்பர் அவர்கள் இன்று காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர்ராஜியூன்) எனும் செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தேன்.


கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரியும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியுமான சகோதரர் அர்சத் காரியப்பரின் தந்தையான அன்னாரை அண்மையில் சகோதரர் அர்சத் காரியப்பரின் வீட்டில் சந்தித்து சுகம் விசாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.


அந்த வயதிலும் முஸ்லிம் சமூகம் தொடர்பிலும், கல்முனை மண் தொடர்பிலும் அவர் கொண்டுள்ள பற்று என்னை ஆச்சரியப்படுத்தியது. மிக நீண்ட தூரநோக்கு கொண்ட பல ஆலோசனைகளை எனக்கு வழங்கிய அவரின் மரண செய்தி என்னுள் ஆழ்ந்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.


அவரின் இழப்பினால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்து கொண்டு காலமான என் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த சகோதரனின் நல்லமல்களை பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராக்கிறேன். 


சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்

பிரதித்தலைவர்- ஸ்ரீ.ல.மு.கா 

பாராளுமன்ற உறுப்பினர்.

முன்னாள் இராஜங்க அமைச்சர்


-ஊடகப்பிரிவு-