ராஜபக்ச கூட்டத்திற்கு எதிராக - ரணில்

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது ராஜபக்சர்களுக்கு சார்பாக கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையிலேயே  நேற்று (05) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 47(3)(அ) சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நேற்று (05) நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதில் பிரதானமாக ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

aஇந்த நீக்கத்துடன், தீவிர ராஜபக்ச சார்பு எம்.பி.க்கள் அனைவரையும் அரசாங்கத்தில் இருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி அவர்களை எந்த அரசாங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி,


1. மகிந்த ராஜபக்ச


2. சமல் ராஜபக்ச


3. நாமல் ராஜபக்ச


4. ஷசீந்திர ராஜபக்ச


5. சாகர காரியவசம்


6. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ


7. ஜயந்த கடகொட


8. சஞ்சீவ எதிரிமான்ன


9. ரஞ்சித் பண்டார


10. டபிள்யூ.டி.வீரசிங்க


11. யு.கே.சுமித்


12. திஸ்ஸ குட்டியாராச்சி


13. நிப்புண ரணவக்க


14. டி.வி.சானகா


15. இந்திக்க அனுருத்த


16. பிரசன்ன ரணவீர


17. இசுரு தொடங்கொட


18. காமினி லோகுகே


19. மர்ஜன் ஃபலீல்


20. சிறிபால கம்லத்


21. சரத் வீரசேகர


22. தெனுகா விதானகமகே


23. சமன்பிரியா ஹெராத்


24. மஞ்சு லலித் வர்ண குமார


25. நாலக கோட்டேகொட


26. மொஹான் சில்வா


27. சி.பி.ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்