Headlines
Loading...
 ஜனாதிபதி வேட்பாளர்களின் ஹெலிகப்டர் பயணங்கள்; கட்டணம் செலுத்தப்பட்டது என்கிறது விமானப்படை

ஜனாதிபதி வேட்பாளர்களின் ஹெலிகப்டர் பயணங்கள்; கட்டணம் செலுத்தப்பட்டது என்கிறது விமானப்படை

ஜனாதிபதி வேட்பாளர்களின் ஹெலிகப்டர் பயணங்கள்; கட்டணம் செலுத்தப்பட்டது என்கிறது விமானப்படை

( அம்னா இர்ஷாத்)

ஜனாதிபதி வேட்பாளர்கள் பலரும் பிரசார பணிகளுக்காக பயன்படுத்தும் ஹெலிகப்டர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டவை என  விமானப்படை தெரிவித்துள்ளது. விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் எரந்த கீகனகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக விமானப்படை விமானங்களை தவறாக பயன்படுத்தப்படுவதாக‌ ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் குறூப் கெப்டன் எரந்த கீகனகே இதனை தெரிவித்துள்ளார்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்யபப்டுகின்றமை தொடர்பில்  ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. ஜனாதிபதி வேட்பாளர்களால் பிரச்சார நோக்கங்களுக்காக இலங்கை விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

இந் நிலையில் இதர்கு பதிலளித்த விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் எரந்த கீகனகே 

'பல முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்கள் இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியுள்ளனர், ஆனால் பாதுகாப்பு அமைச்சுக்கு பணம் செலுத்திய பின்னர் உரிய நடைமுறைகளை பின்பற்றிய பின்னரேயே விமாங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ' என தெரிவித்தார்.

0 Comments: