ஸகாத்துல் பித்ர், என்றால்???

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஸகாத்துல் பித்ர் என்பது ஸதகத்துல் பித்ர் என்றும் அழைக்கப்படுகின்றது. இஸ்லாமிய வழக்கில் ஸகாத்துல் பித்ர் என்ற பெயர் ரமழான் மாதத்தில் இறுதியில் கொடுக்கப்படுகின்ற தர்மத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஸதகத்துல் பித்ர் என்பது ஆண் பெண் மற்றும் சிறியோர் பெரியோர் என்ற வேறுபாடு இன்றி ஒவ்வௌhரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்பாளியின் வீணான பேச்சுக்கள் மற்றும்  வீணான நடத்தைகளை சுத்;தப்படுத்துவதற்காக வேண்டியும் ஏழைகளுக்கு உணவுக்காகவும் ஸகாத்துல் பித்ரைக் கடமையாக்க&#300#3007;னான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி).நூல் அபூதாவூத்)

ஸகாத்துல் பித்ர் எப்போது கடமையாக்கப்பட்டது? ஹிஜ்ரி 02ஆம் ஆண்டு  கடமையாக்கப்பட்டது.
ஸகாத்துல் பித்ர் கடமையாகுவதற்குரிய நிபந்தனைகள் 
ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றுவதற்கு பின்வரும் மூன்று நிபந்தனைகள் இருத்தல் வேண்டும்.
1.ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றுபவர் முஸ்லிமாக இருத்தல் வேண்டும்.
2.ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றுவதற்கு ஷவ்வால் மாதப் பிறை தென்படுதல்.
3.பெருநாள் தினத்தில் (இரவு பகல் அடங்கலாக) தனக்காகவும் தன்பராமரிப்பில் உள்ளவர்களுக்காகவும் உணவு உடை இருப்பிடம் மற்றும் கடன் தேவைகள் போக மேலதிகமானதைப் பெற்றிருத்தல்.

யாருக்காக இதனை வழங்குவது கடமை?
தனக்காகவும் தான் பராமரிப்பது அவசியமானவர்களுக்காகவும் இதை வழங்குவது கடமையாகும். (ரமழான் மாதத்தின் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னால் மணம் முடித்த மனைவி பிறந்த குழந்தை மற்றும் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னால் மரணித்தவர் ஆகியோர்களுக்காகவும் கொடுக்கப்படல் வேண்டும்.)

யாருக்கு இதனை வழங்குவது கடமை?
அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஸகாத் பெறத் தகுதியுடைய  பகீர்கள் மிஸ்கீன்கள் அதன் உத்தியோகத்தர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அடிமைகளை விடுதiலை செய்வதற்கும் கடனில் மூழ்கியவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போராடுபவர்கள் வழிப் போக்கர்கள் ஆகியோருக்கு வழங்குவது கடமையாகும். 

எப்போது வழங்கப்படல் வேண்டும்?
ஸகாத்துல் பித்ர் என்பது ஷவ்வால் பிறை கண்டது முதல் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படும் வரை, அன்றைய நாளுடைய தேவைக்கு மேலதிகமாக உள்ள சொத்திலிருந்து கட்டாயம் கொடுக்கவேண்டிய ஒரு இபாதத்தாகும். றமழான் பிறை கண்டது முதல் இதைக் கொடுக்கவும் முடியும். தொழுகை முடிந்து நிறைவேற்றப்பட்டால் அது ஸக்காத்துல் பித்ராவாக ஆகிவிடாது மாறாக அது தர்மமாகிவிடும். இதற்க ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் கானப்படுகின்றது 
'யார் (ஸக்காத்துல் பித்ரை) தொழுகைக்கு முன்னர் நிறைவேற்றினாரோ அது ஒப்புக்கொள்ளப்பட்ட ஸக்காத்துல் பித்ராகும். எவர் தொழுகைக்கு பின் நிறைவேற்றினாரோ அது ஏனைய தர்மமாகிவிடும்' என நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி). நூல் அபுதாவுத்)

எவ்வளவு வழங்கப்பட வேண்டும்? எப்பொருளில் வழங்கப்படவேண்டும்?
ஒரு நபருக்கு தலா 2400 கிராம் வீதம் பிரதான உணவாக உட்கொள்ளப்படக் கூடிய அரிசி, கோதுமை போன்ற தானிய வகையிலிருந்தே ஸக்காத்துல் பித்ர் கொடுக்கவேண்டும் என்றும் அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களது காலத்தில் தீனார், திர்ஹம் போன்ற நாணயங்கள் புழக்கத்திலிருந்தும் கூட தாணியங்களிலிருந்தே ஸக்காத்துல் பித்ர் கொடுக்கும்படி கூறியுள்ளார்கள்.

நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஸாஃ அளவு பேரீச்சம் பழத்தை அல்லது ஒரு ஸாஃ அளவு வாற்கோதுமையை ஸகாத்துல் பித்ராகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள் என இப்னு உமர் றழியல்லா{ஹ அன்{ஹ அவர்கள்  அறிவிக்கின்றார்கள்.

மேலும், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிம{ஹமுல்லாஹ் அவர்களிடம் ஸகாத்துல் பித்ரை திர்ஹமாகக் கொடுப்பது சம்பந்தமாகக் கேட்கப்பட்ட போது 'நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறைக்கு மாற்றமாகக் கொடுத்தால் அது ஸகாத்துல் பித்ராக நிறைவேற மாட்டாதோ என்று நான் அஞ்சுகின்றேன்' என்று கூறினார்கள்.

என்றாலும், இமாம் அபூஹனீபா ரஹிம{ஹல்லாஹ் அவர்கள் சில ஆதாரங்களை அடிப்டையாக வைத்து ஸகாத்தல் பித்ரை நிறைவேற்றும் பொழுது அதன் பெறுமதியைக் கொடுக்கலாம் என்று கூறுகின்றார்கள். என்றாலும், இக்கருத்து ஆதாரங்கள் அடிப்படையில் பலம் குறைந்ததாக உள்ளது.
ஆகவே, ஸக்காத்துல் பித்ர் தானியமாகவே கொடுக்கப்படவேண்டும் என்றுள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்தும், பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்தினை அடிப்படையாக வைத்தும், ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றும் போது பணமாக அல்லது வேறுபொருட்களாகக் கொடுப்பதைத் தவிர்த்து, இலங்கையின் பிரதான உணவாக உற்கொள்ளப்படும்; அரிசியையே ஸக்காத்துல் பித்ராகவாகக் கொடுத்தல் வேண்டும். மேலும், இது ஓர் இபாதத் ஆக இருப்பதால் நபி ஸல்லல்லா{ஹ அலைஹிவஸல்லம் அவர்கள் எவ்வாறு செய்யதார்களோ அவ்வாறே அதை நிறைவேற்றுவது அவசியமாகும்.

இன்னும், மேலதிக உதவிகள் செய்ய நாடினால் கடமையான ஸக்காத்துல் பித்ரை அரிசாகக் கொடுப்பதுடன், சதகா மற்றும் அன்பளிப்பிலிருந்து பொருட்களாகோ அல்லது பணமாகவோ விரும்பியவற்றைக் கொடுக்கலாம். மேலும், ஸக்காத்துல் பித்ர் கொடுப்பதற்குக் கடமையானவர்கள்; இன்னும் ஒருவரைக் கொடுப்பதற்குப் பொருப்பாக்கவும் முடியும். இச்சந்தர்ப்பத்தில் ஸக்காத்துல் பித்ரைக் கொடுப்பவர்கள் தாம் பொருப்பாக்குபவர்களுக்குப் பணமாக அனுப்பி அவர்கள் அரிசியை வாங்கி உரியவர்களுக்கு ஸக்காத்துல் பித்ராக வினியோகிப்பார்கள்.   எனவே மார்ககத்தை அதன் தூயவடிவில் அறிந்து செயற்படுவதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

எ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி (காஷிபி)