சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்

 


ஒவ்வெரு நாளும் புது புது வரலாறுகளை காலம் உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் சிலவற்றை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். வரலாறுகளை நாம் உருவாக்குவதில்லை வரலாறு நம்மை உருவாக்குகிறது.
 
இலங்கையில் சமீப காலமாக மக்களால் விரும்பி ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு அரசியல் மாற்றங்கள் வேறு வழியின்றி மக்களால் தீர்மானிக்க படுகிறது. மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகள் உருவாகாததின் விளைவு தான் மக்களாலேயே நல்ல அரசை அமைக்க முடியவில்லை. மக்கள் மத்தியில் சிந்திக்கும் தன்மையை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கட்சிகளை பற்றி பேசினாலே சிலர் அரசியல் எனக்கு பிடிக்காது எனவே அரசியலை பற்றி நாம் பேச வேண்டாம் என்று ஒதுங்கி விடுவர். 
 
விரல் விட்டு எண்ண கூடிய அளவில் தான் அரசியல் குறித்த ஆர்வம் மக்களிடம் இருக்கிறது.   அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் அரசியல் குறித்து தவறான எண்ணங்கள் இருக்கிறது. அரசியல் என்றாலே அடி பிடி என்றும் , அரசியல் என்றாலே ஏமாற்று என்றும் ,அரசியல் என்றாலே கட்சிக்குள்ளே போட்டி பொறாமைகள் என்ற ஒரு  எண்ணமும் இருக்கிறது . 
 
பொதுவாக இளைஞர்களிடம் பேசும் போது கூட அவர்கள் இப்படி பேசுகிறார்கள்.  சமூக தளங்களில் அரசியல் குறித்து பதிவு செய்யாதீர்கள் என என்னிடமே சிலர் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பதிவுகளை பார்த்தால் எந்த ஒரு நோக்கமோ லட்சியமோ அவர்களிடம் தெரியவில்லை. ஏதோ பொழுதை போக்க நண்பர்களோடு அரட்டை அடிக்க தான் இணையம் பயன் படுத்துவதாக தெரிகிறது. 
 
இணையம் என்பது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான வர பிரசாதம் என்றே சொல்லலாம். பொழுது போக்கிற்கும் அரட்டைக்கும் பயன் படுத்தலாம் தவறில்லை. ஆனால் சிறிதளவேனும் சமூக சிந்தனைகள் நமக்கு இருக்க வேண்டும் சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும். 
 
 மக்களாட்சி தத்துவத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் நம் மீது திணிக்கபட்டுள்ளது.                  
 
ஒவ்வெரு நாள் நம் வாழ்க்கை முறை முதல் நாம் சாப்பிடும் உணவு வரை அரசியல் தான் தீர்மானிக்கிறது.  அரசியலே பிடிக்காது, என்று ஒதுங்கி கொண்டாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அரசியலுக்கு உள்ளாக்க படுகிறோம். அரசியல் பிடிக்காது என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சொல்லும் கருத்தாக அரசியல் நேர்மையாக இல்லை என்று தான்.  அரசியலில் நேர்மையை எதிர் பார்க்கும் நாம் அரசியலை விட்டு தூரத்தில் நிற்கும் போது அது எப்படி இருக்கும்.  

 ஒரு புறம் இணையத்தை பயன் படுத்துவோர் சரியாக பயன் படுத்த வில்லை என்றாலும் கடந்த நாட்களில் மேற் கு உலக நாடுகளில் அதன் தாக்கம் பாரியா மாற்றம்களை ஏற்படுத்தி உள்ளது. 
 
இணையம் மூலம் கிழக்கில் ஒரு புதிய அரசியல் மாற்றம் அமைக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம். இது ஒரு வரலாற்று அரசியல் மாற்றத்தை உருவாக்கும் புதிய வழிகோலாக அமையும் . 
 
 நாம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் நம் மீது திணிக்க பட்டு விட்டது . அதை நாம் தான் சுத்த படுத்த வேண்டும்.  மாற்றம் நம் கையில்     இவ்வாறு  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அரசியலில் இணையத் தளங்களின் பங்களிப்பு பற்றி கூறினார்