முஸ்லிம்களின் காணியை துண்டாடி, குடிசைகளும் அமைத்த சிங்களவர்கள் - மாத்தளையில் அடாவடி

மாத்­தளை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வாரி­ய­பொல, எல்­வல பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 32 ஏக்கர் பரப்­ப­ள­வி­லான தோட்­ட­மொன்றில் பலாத்­கா­ர­மாக பெரும்­பான்மை சமூ­கத்­தினர் உட்­பி­ர­வே­சித்து காணி­யினை துண்­டாடி பங்­கிட்டு குடி­சைகள் அமைத்துக் கொண்­டுள்­ளனர்.

32 ஏக்கர் 30 பேர்ச்­சு­களைக் கொண்ட இறப்பர் தோட்டம் அக்­கு­ற­னையைச் சேர்ந்த எம்.ஏ.எம். ரிஸ்வான் உட்­பட அவ­ரது உற­வி­னர்­க­ளுக்கு சொந்­த­மா­ன­தா­கவும் ஆரம்­பத்தில் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தோட்­டத்­துக்குள் அத்­து­மீறி பலாத்­கா­ர­மாக உட்­பி­ர­வே­சித்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் காணியை உரிமை கொண்­டா­டி­னார்கள். பின்பு இக்­காணி அர­சாங்­கத்­துக்குச் சொந்­த­மா­னது என செய்­தி­களைப் பரப்­பி­ய­தை­ய­டுத்து தற்­போது சுமார் 70 பேர் வரையில் காணியை சொந்தம் கொண்­டாடி வரு­கி­றார்கள் என தோட்­டத்தின் உரி­மை­யாளர் ரிஸ்வான் தெரி­வித்தார்.
காணியை துண்­டாடி வேலி­ய­மைத்து சில சிறிய குடி­சை­க­ளையும் அமைத்துக் கொண்­டுள்­ளார்கள். இத்­தோட்­டத்தில் உரி­மை­யா­ள­ருக்கு சொந்­த­மான எவ்­வித கட்­டி­டங்­களும் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தத் தோட்­டத்தை ஒரு பகு­தி­நேர காவ­லா­ளியே கண்­கா­ணித்து வந்­துள்ளார். பெரும்­பான்மை இனத்­த­வர்கள் காவ­லாளி தோட்­டத்­துக்குள் பிர­வே­சிப்­ப­தையும் தடை செய்­துள்­ளனர்.
பெரும்­பான்மை இனத்­த­வர்­களின் அத்­து­மீ­றிய பிர­வே­சத்தால் பாதிக்­கப்­பட்ட  மக்கள் மாத்­தளை பொலிஸில் முறை­யிட்ட போதும் உரிய நட­வ­டிக்­கைகள் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை என உரி­மை­யாளர் தெரி­விக்­கிறார்.
உரி­மை­யா­ளரால் மாத்­தளை மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. வழக்கு விசா­ரணை எதிர்­வரும் 4 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. 1972 ஆம் ஆண்டு அப்­போ­தைய அர­சாங்கம் ஒருவர் 50 ஏக்­க­ருக்கு அதி­க­மாக காணி­களை சொந்­த­மாக வைத்­தி­ருக்க முடி­யாது என்ற சட்­டத்தின் கீழ் LRC யினால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணியின் ஒரு பகுதியான இந்தத் தோட்டம் 1992 ஆம் ஆண்டு உரிமையாளருக்கு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இறப்பர் தோட்டமான இந்தக் காணியின் உறுதிகள் உரிமையாளரிடம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் காணியை துண்டாடி, குடிசைகளும் அமைத்த சிங்களவர்கள் - மாத்தளையில் அடாவடி முஸ்லிம்களின் காணியை துண்டாடி, குடிசைகளும் அமைத்த சிங்களவர்கள் - மாத்தளையில் அடாவடி Reviewed by TODAYCEYLON on August 03, 2017 Rating: 5