சில காரணங்களால் 205 பேரின்உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தம்


க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் முகம்கொடுத்த 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று (28) அகதிகாலை வெளியாகின. இவ்வாறு பெறுபேறுகள் வெளியானவர்களிலேயே 205 பேருடைய பெறுபேறுகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பரீட்சை முறைகேடுகள் காரணமாக இவ்வாறு பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 163104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெறலாம் எனவும் கூறப்படுகின்றது.
சில காரணங்களால் 205 பேரின்உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தம் சில காரணங்களால் 205 பேரின்உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தம் Reviewed by NEWS on December 28, 2017 Rating: 5