பிறப்புச்சான்றிதழின்றி அடையாள அட்டை!


“பிறப்பு சான்றிதழ் இல்லாமலேயே தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் வியாணி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்றுநிருபத்தை அனைத்து பிரதேச செயலகங்களுக்கும், கிராமசேவை உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிறப்புச் சான்றிதழ் இல்லாமலேயே தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தேசிய அடையாள அட்டைக்கென விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ் இல்லாதபோது குறித்த நபர் சார்பாக அருகிலுள்ள உறவினர்கள் இருவரது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து உறுதிக்கடிதத்தை வழங்கினால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும். இதே நடைமுறையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருகின்றது” என்றார்.
பிறப்புச்சான்றிதழின்றி அடையாள அட்டை! பிறப்புச்சான்றிதழின்றி அடையாள அட்டை! Reviewed by NEWS on December 19, 2017 Rating: 5