லீனத் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும்

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை லீனத் கல்வி நிறுவனத்தின் சகோதர நிறுவனமான இஸ்லாமபாத் லீனத் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் லீனத் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் எஸ்.எம். பஸ்லீன் தலைமையில் நேற்று (25) திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உளவளத்துறை ஆலோசகரும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் வருகை தரு விரிவுரையாளருமான அஷ்சேக் எம்.ஜி. அப்துல் கமால் இஸ்லாஹி, கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எம்.எல். ஹமீமா முகைடீன், விஷேட அதிதிகளாக இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.சி.எம். அபூபக்கர், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண தலமை அலுவலக அதிகாரி எம்.ஐ.எம். முகைதீன், ஆயுர்வேத வைத்தியர் ஜுமானா ஹசீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது அரங்கேற்றப்பட்ட லீனத் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் பார்வையாளர்களின் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. 

மேலும் லீனத் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஞாபகச் சின்னம், சான்றிதழ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு அர்பணிப்புடன் தன்னலம் பாராது சேவையாற்றிய குறித்த பாடசாலை ஆசிரியர்களை பெற்றோர்கள் பாராட்டி பரிசில்கள் வழங்கிவைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...