அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு - நாளைபைஷல் இஸ்மாயில்  

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஒன்று கூட்டிய வேட்பாளர்கள் கௌரவிப்பும், புரிந்துணர்வு அரசியலுக்கான நடை பவனியும் இடம்பெறவுள்ளதாக அட்டாளைச்சேனை அபிவிருத்திச் சமூகத்தின் செயலாளர் எம்.எச்.மின்வர் இன்று (31) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெறவுள்ள இந்த ஒன்றுகூடல் நிகழ்வு நாளை காலை (01) திங்கட்கிழமை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற முஸ்லிம் கூட்டமைப்பு, சுயேற்சைக் குழுவினர்கள் உள்ளிட்ட கட்சிகளின் 125 வேட்பாளர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு 18 பேர் தெரிவுக்காக 125 பேர் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி போன்ற கிராமங்களில் இருந்து குறித்த கட்சிகளில் போட்டியிட களம் இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு - நாளை அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு - நாளை Reviewed by NEWS on December 31, 2017 Rating: 5