தேசிய காங்கிரஸ் தைக்காநகர் வட்டாரத்தில் படுதோல்வியடையும் - றமீஸ்!தேசிய காங்கிரஸ் கட்சி அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட் தைக்காநகர் வட்டாரத்தை வெல்வோம் என தம்பட்டம் அடிக்கின்றனர், இந்த வட்டாரத்தில்தான் எங்குமில்லாத தோல்வி அவர்கள் எதிர்கொள்வர் என சமூக சேவையாளர் றமீஸ் குறிப்பிட்டுள்ளார்.

சப்றின் மௌலவியை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய அவர்,

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியமைக்க போகிறது, அதிகாரத்தில் உள்ள ஒரு கட்சிக்கு எமது வேட்பாளரை வெல்லவைத்து அனுப்பவதே சாணக்கியம், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எவ்வாறு ஊருக்கு சேவை செய்ய முடியும், இவர்கள் கடந்தகாலத்தில் செய்த சேவைகள் பற்றி மக்களிடம் கேட்டால் சொல்லுவர், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

ஒரு மௌலவியை ஏன் ஒருமித்து தேர்வு செய்தோம், மார்க்கத்தை கற்ற ஒருவரை சபைக்கு அனுப்புவது நாம் செய்யும் பாரிய கைங்கரியம், சப்றின் மௌலவி இன்சா அல்லாஹ் வெல்வார் என்றார்.
தேசிய காங்கிரஸ் தைக்காநகர் வட்டாரத்தில் படுதோல்வியடையும் - றமீஸ்! தேசிய காங்கிரஸ் தைக்காநகர் வட்டாரத்தில் படுதோல்வியடையும் - றமீஸ்! Reviewed by NEWS on December 22, 2017 Rating: 5