விரக்தியான சமூகத்தை உருவாக்கும் கல்வித்திட்டம் (கல்வி பற்றிய கட்டுரை) - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

விரக்தியான சமூகத்தை உருவாக்கும் கல்வித்திட்டம் (கல்வி பற்றிய கட்டுரை)

Share This

இன்றைய இலங்கையின் கல்வித் திட்டத்தின் இலக்கு வெறும் மதிப்பெண்களாகத்தான் உள்ளது. இதனால்தான் இன்று பரீட்சை பெறுபேறு வெளியாகின்ற வாரத்தில் அதிகளவு தற்கொலைகள் பதிவாகின்றது. சுருக்கமாக கூறினால் சாதாரண தர மற்றும் உயர்தர வயது மாணவர்களின்  தற்கொலைகளுக்கான  காரணம்  பரீட்சையில் குறைந்த மதிப்பெண் பெற்றது. அல்லது பரீட்சையில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் என்ற பயம்.
அவ்வகையில் இலங்கையில் சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டிய கல்வித்திட்டம் இன்று பல தற்கொலையாளிகளை உருவாக்கியுள்ளது. இதற்கான காரணம் நாம் கல்வித்திட்டம் ஊடாக மாணவர்களுக்குள்  போட்டி, பொறாமை மனப்பாங்கை விதைத்தமையாகும்.
நமது நாட்டில் 3 வயதில்  கல்வி வாழ்க்கையை துவங்கி 7 வயதில் இருந்து 1௦ வயதுவரை புலமைப் பரீட்சை போட்டி உருவாகின்றது.  புலமைப் பரீட்சை அதனுடன் இணைந்து  பெற்றோர்களும்  சமூகமும் ஒவ்வொரு மாணவர்களையும் இன்னொரு மாணவர்களுடன் ஒப்பீடு செய்து சில மாணவர்களை விட இன்னும் சிலரை உயர்த்தி அல்லது தாழ்த்திப் பேசி வகுப்பறையில் ஒன்றாக நண்பர்களாக வாழ வேண்டிய நண்பர்களிடம் பகையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம்.
இதற்கு மேலதிகமாக பல்கலைகழகம் செல்ல உலகக் கல்விதான் தேவை என்பதால் மார்க்கக் கல்வியையும் 1௦ வயதிலிருந்து வழங்குவதை நிறுத்தினோம். இதனால் ஒழுக்கம் இல்ல கல்வி சமூகத்தில் பறவி ஒழுக்கம் இல்ல சமூகம் உருவாகியுள்ளது.
சிறந்த கல்விக் கலாசாரமும் மலையேரிவிட்டது. அதற்கான காரணம் நாம் இலங்கையில் ஆரம்ப வகுப்பில் 250 000 மேற்பட்ட மாணவர்களுக்கு கற்பதற்கு இடம் வழங்கினோம். பின்னர் உயர்தரத்தில் சுமார் 175 ௦௦௦ மாணவர்களுக்கு கற்பதற்கு இடம் வழங்குகின்றோம். பின்னர் பல்கலைக்கழகத்தில் 3௦ ௦௦௦ மாணவர்களுக்குத்தான் அனுமதி வழங்குகின்றோம். இடையில் புலமை பரீட்சை என்று 25௦ ௦௦௦ மாணவர்களுக்கு பரீட்சை வைத்து சுமார் 25 ௦௦௦ மாணவர்களுக்கு உதவி செய்கின்றோம். இவ்வாறு எமது கல்வித்திட்டம் ஊடாக ஆரம்ப வகுப்பில் இணையும் அணைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் வரை  அரச உதவியில் கற்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
இவ்வாறு சமூகத்தின் போக்கு மற்றும் அரச இலவசக் கல்வியில் உள்ள குறைபாடுகள் காரணமாக புலமை பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை என்பன மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு விதிப்புள்ளி போல் உள்ளது. இதனால் பல மாணவர்களின் வாழ்க்கை இந்தப் பரீட்சையுடன்  முடிந்து விட்டது.
இலங்கையில் உள்ள பரீட்சையுடன் இணைந்த கல்வித்திட்டம் காரணமாக சமூகத்திற்கு கிடைத்தது வெறும் மனனமிடும் இயந்திரங்கள் அல்லது மாணவர்களின் சடலங்கள்.
இவ்வகையில் இலங்கை கல்வித்திட்டம் நாட்டுக்கு பொறுத்தமற்றது. இதனை மாற்றி பின்லாந்து கல்வித்திட்டதை நாட்டுக்குள் அறிமுகப்படுத்த அரசு முயற்சிக்கின்றது. அவ்வாறு பின்லாந்து கல்வித்திட்டத்தில் என்னதான் உள்ளது என அவதானிப்போம்.
பின்லாந்து கல்வித்திட்டத்தில் பரீட்சைகள் உள்ளது என்றாலும் மாணவர்களின் நிலைகளை வெளியிடுவதில்லை. ஒரு மாணவன் இன்னொரு மாணவனை புள்ளைகளைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. பரீட்சை பெறுபேறு வழங்குவதில்லை.  இதனால் அங்கு கற்றலில் போட்டி இல்லை அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற மன உளைச்சலும் இல்லை. இதனால் அவர்கள் சகபாடியை எதிரியாக பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் அவர்கள் மகிழ்ச்சியாக கற்கிறார்கள்.
நமது சமூகம் இன்று ஒரு மாணவனை ஒப்பிடுவது நிலைகளைக் கொண்டுதான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனால் கற்கும் போது சகபாடியை எதிரியாக பார்க்கும் நிலை. அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற மன உளைச்சல் என்று இலங்கை மாணவர்களில் அதிகமானோர் கவலையுடனும் விரக்தியுடனும் கற்கின்றனர்.
பெற்றோர்களே! ஒரு மாணவரை இன்னொரு மாணவனுடன் எவ்வகையிலும் ஒப்பீடு செய்யாதீர்கள். ஒவ்வொரூ மாணவனின் கை விரல் ரேகை கூட வித்தியாசமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பிள்ளையின் ரேகைகள் வித்தியாசம் அதுபோல் அவனது அறிவு ஆளுமை சிந்தனை என்பனவும் வித்தியாசம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு பிள்ளை மகிழ்ச்சியாக கற்கும் போதுதான் அவனுக்குள் அறிவு ஆளுமைகள் வளர்கின்றது. எனவே உங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக கற்பதற்கு சூழலை உருவாக்கிக் கொடுங்கள்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE