ஆளுமையுள்ள ஓர் தவிசாளரை இழந்தது பொத்துவில் பிரதேசம்!பொத்துவிலுாரான் பாறுக்

பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இங்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களை களமிறக்குவதில் பாரிய சிக்கல் நிலை கட்சிக்கு உருவானது, பலரின் வீண் வெட்டுக்குத்துகளால் இளைய தலைமுறை வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டது,

அதில் ஒருவர்தான் பைசல் மொஹிடீன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் காதர் மொஹதீனின் புதல்வர், சட்டத்தரணி, கல்வி ஆளுமை, சமூகப்பற்று, மார்க்கப்பற்று என்று அடுக்கடுக்காய் ஆயிரம் விடயம் இருந்த போதிலும் நயவஞ்சகர்கள் செய்த சூழ்ச்சியால் களமிறக்கப்படாமல் தடுக்கப்பட்டார்.

இந்த ஆளுமையை பொத்துவில் இழந்தது கவலைக்குரிய விடயம் என்றாலும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த முறை சபையை வெல்வது என்பது மிகவும் கடினம் என பேசப்படுகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...