என்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை எனது தந்தைக்கு இல்லை ; நாமல் ராஜபக்‌ஷஅரசியலில் தான் செல்லும் இடத்தை விதியே முடிவு செய்யும் என்றுநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை தனது தந்தையும்,முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இல்லை என நாடாளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாமல் ராஜபக்ஷவை 2025ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு கொண்டுவருவதுக்காகவே மஹிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிப்பதற்கானசெயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அண்மையில்தெரிவித்திருந்தார்இதற்கு பதிலளிக்கும் முகமாகவே நாமல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

“ என்னை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு மஹிந்தவுக்கு எவ்வித தேவையும்இல்லை என்பதை முதலில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நான் போகும்பாதையை விதி தீர்மானிக்கும்.நான் அரசியலில் நீடித்து இருக்கத் தான்போகின்றேன்.எஸ்.பீ.திசாநாயக்க போன்றவர்கள் பல வருடங்களாக  அரசியலில்ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அமைச்சர்எனவே அவரது அரசியல் பற்றி மக்களுக்குநன்றாகவே தெரியும் என்ற போதிலும்,அவ்வாறானவர்களின் இந்தக் கருத்துமுக்கியமான ஒன்றல்ல” என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
என்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை எனது தந்தைக்கு இல்லை ; நாமல் ராஜபக்‌ஷ என்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை எனது தந்தைக்கு இல்லை ; நாமல் ராஜபக்‌ஷ Reviewed by NEWS on December 19, 2017 Rating: 5