மத்திய வங்கி ஊழல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

NEWS
0 minute read


அடுத்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர்  மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், அறிக்கையினை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என அரச தொழில்முயற்சி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். குற்றவாளிகளை தண்டிப்பதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

(ஆர்.யசி)
To Top