கொழும்பிலிருந்து சென்ற பஸ் விபத்து - ஒருவர் பலி - 27 பேர் காயம்கொழும்பில் இருந்து தனமல்வில நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரண வர்னாவ பாடசாலைக்கு அருகில் உள்ள பாலத்தில் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த அனர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதுடன், 25 வயதான நடத்துனர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 18 பேர் தனமல்வில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து சென்ற பஸ் விபத்து - ஒருவர் பலி - 27 பேர் காயம் கொழும்பிலிருந்து சென்ற பஸ் விபத்து - ஒருவர் பலி - 27 பேர் காயம் Reviewed by NEWS on January 01, 2018 Rating: 5