ரோஹிங்கிய முஸ்லிம்களை, திருமணம் முடிக்கத் தடை - மீறினால் 7 வருட சிறை
ரொஹிங்கிய முஸ்லிம்களை திருமணம் முடிக்க தடை விதிக்கும் சட்டத்தை பங்களாதேஷ் நீதிமன்றம் ஒன்று உறுதி செய்துள்ளது.

பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் ரொஹிங்கியர்களுக்கு இடையிலான திருமணப் பதிவை தடுக்கும் சட்டம் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. குடியுரிமை பெறுவதற்காகவே இவ்வாறான திருமணம் இடம்பெறுவதாக பங்களாதேஷ் அரசு குற்றம்சாட்டுகிறது.

2017இல் மியன்மாரில் இருந்து அரை மில்லியன் ரொஹிங்கியர்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர். 18 வயது ரொஹிங்கிய பெண்ணை திருமணம் முடித்த 26 வயது நபர் ஒருவரை பொலிஸார் தேடி வரும் நிலையிலேயே அவரது தந்தை இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

ஷொஹைப் ஹொஸை ஜெவல் என்பவர் ரொஹிங்கிய பெண்ணை திருமணம் முடித்ததை அடுத்து கடந்த ஒக்டோபர் தொடக்கம் பொலிஸார் அவரை தேடிவருவதாக உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ரொஹிங்கியர் ஒருவரை திருமணம் முடித்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிரான மனுவை நிராகரித்த டாக்கா உயர் நீதிமன்றம், சட்ட செலவுகளுக்காக 1.200 டொலர்களை செலுத்தும் படியும் உத்தரவிட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...