நகர சபையின் அனுமதியின்றி பணிகள் மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் 
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட வீதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற வீதி திருத்த வேலைகளையோ அல்லது வீதிகளை செப்பனிடும் பணிகள் போன்றவற்றை நகர சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் இன்று (01) தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு வீதி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தாலும் முதலில் நகர சபையின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு அனுமதியைப் பெற்ற பின்னர்தான் வீதி வேலைகளுக்கான பணிகளை முன்னெடுக்கவேண்டும். இதனை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன். 
இது தொடர்பான அறிவித்தல்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக ஏறாவூர் அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது இடங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...