ஜெரீன் ஏ.கபூர்
அக்கரைப்பற்று மாநகர சபையில் கூட்டாட்சிதான் அமையும், முஸ்லிம் காங்கிரசும் - NFGG உம் ஆட்சியமைக்கும் என்று கனவு கண்டு கொண்டிருப்போர்கள் தேர்தல் முடிந்த கையுடன் துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓட்டம் பிடிப்பார்கள் என எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துக்களை எமது செய்தியாளரிடம் பகிர்ந்த சபீஸ்,
குதிரைச்சின்னத்திற்கு ஒட்டுமொத்த அக்கரைப்பற்று மண்ணும் ஒருமித்து வாக்களிக்கும் இதில் வேட்பாளர்கள் முகங்கள் தாண்டி அதாஉல்லா எனும் ஓர் மகனுக்காக வாக்களிப்பர் இன்சா அல்லாஹ்.
இன்று அக்கரைப்பற்று பெற்ற அபிவிருத்திகளை பலரும் விமர்சிக்கலாம் ஆனுால் அதில் ஒரு செங்கல்லையேனும் அவர்களால் புதிதாக கட்டிவிட முடியாது,
இவர்களை போல பலரை பல தேர்தல்களில் நாங்கள் பார்த்துள்ளோம். இவர்கள் சொல்லும் இந்த பொய் வாக்குறுதிகள் அவர்கள் துாக்கத்தில் தான் வழங்குவார்கள் என்றார்.
தேசிய காங்கிரஸ் தனியாக ஆட்சியமைக்கும்; பகல் கனவுகள் காண்பவர்களுக்கு சாட்டை
Reviewed by NEWS
on
January 03, 2018
Rating:
